Showing posts with label LABOUR. Show all posts
Showing posts with label LABOUR. Show all posts

Friday, June 29, 2018

வேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத பிஎப் (EPF) தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் சந்தாதாரர்கள், வேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத பிஎப் தொகை எடுத்துக் கொள்ளலாம்.
தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிய ஒரு மாதத்துக்கு பின்னர் தங்களது இபிஎப் கணக்கிலிருந்து 75 சதவீத தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க இபிஎப் அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் மீதமுள்ள 25 சதவீத தொகையை 2 மாதங்களுக்கு பின்னர் எடுத்துக் கொள்ளவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் வகை செய்கிறது.
தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிய 30 நாட்களில் தங்களது பிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி பிஎப் கணக்கிலிருந்து 75 சதவீதத்தை எடுத்துக் கொண்டு கணக்கை அப்படியே தொடரலாம் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மத்திய காப்பாளர் குழு தலைவராகவும் கங்வார் உள்ளார். காப்பாளர் குழு கூட்டத்துக்கு பின்னர் இதனை அமைச்சர் கூறினார்.
தற்போதுவரை தொழிலாளர்கள் வேலையை விட்டு விலகினால் அவர்களது பிஎப் கணக்கிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பின்னரே இபிஎப் கணக்கிலிருந்து தொகையை எடுக்க முடியும்.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்களது இபிஎப் கணக்கை அப்படியே தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தால் இந்த கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் தொழிலாளர்கள் வேலையிழந்த 30 நாட்களில் 60 சதவீத பணத்தை எடுக்கவே முன்மொழியப்பட்டிருந்தது, ஆனால் நேற்று நடைபெற்ற மத்திய காப்பாளர் குழு கூட்டத்தில் இந்த அளவை 75 சதவீதம் உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடிஎப் பண்டு நிறுவன முதலீடு செய்வதும் தொடரும் என்றும் அமைச்சர் கூறினார். -பிடிஐ

THANKS FOR 
THE HINDU TAMIL PAPER
http://tamil.thehindu.com/business/article24265232.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read