Thursday, June 28, 2018

‘மைண்டு டிரீ’ நிறுவனர் பங்குகள் விற்பனை


புது­டில்லி : தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான, ‘மைண்­டு­ டிரீ’ நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர்­கள், அந்­நி­று­வ­னத்­தில், தங்­க­ளுக்கு இருக்­கும் பங்­கு­களை விற்­கும் முயற்­சி­யில் இறங்கி இருக்­கின்­ற­னர்.

தக­வல் தொழில்­நுட்ப துறை­யில், மென்­பொ­ருள் சேவை பிரி­வில் இயங்கி வரும் முன்­னணி நிறு­வ­னங்­களில் ஒன்று, மைண்­டு­ டிரீ. இந்­நி­று­வ­னத்­தின் நிறு­வ­னர்­கள், தங்­கள் பங்­கு­களை விற்­பனை செய்­வ­தற்­காக, இரண்டு வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளு­டன் பேசி வரு­வ­தாக செய்­தி­கள் வரு­கின்­றன. குறிப்­பாக, ஜப்­பான் நாட்­டைச் சேர்ந்த, என்.இ.சி., கார்ப் நிறு­வ­னம், பங்­கு­களை வாங்­கு­வது குறித்து பேச்சு நடத்தி வரு­கிறது.

மைண்­டு­ டிரீ நிறு­வ­னத்­தில், சுப்­ரதோ பக்‌ஷி, கே.நட­ரா­ஜன், என்.எஸ்.பார்த்­த­சா­ரதி மற்­றும் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­கா­ரி­யான, ரோஸ்­டவ் ராவ­ணன் ஆகி­யோ­ரின் பங்­கு­களை வாங்­கு­வது குறித்து பேச்சு நடை­பெ­று­கிறது. இந்­நி­று­வ­னத்­தில் இவர்­கள் வசம், 13.35 சத­வீத பங்­கு­கள் உள்­ளன; இவற்­றின் தற்­போ­தைய சந்தை மதிப்பு, 2,087.15 கோடி ரூபா­யா­கும். இந்த பங்­கு­களை வாங்­கு­வ­தற்­காக, என்.இ.சி., கார்ப் நிறு­வ­னம், பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லிஞ்ச் நிறு­வ­னத்தை ஆலோ­ச­க­ராக நிய­மித்­துள்­ளது.

இதற்­கி­டையே, மைண்­டு­ டிரீ நிறு­வ­னத்­தில், 20 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மான பங்­கு­களை வைத்­தி­ருக்­கும், ‘கேப் காபி டே’ நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர், வி.ஜி.சித்­தார்த்­தா­வும் தன் பங்­கு­களை விற்­று­வி­டும் எண்­ணத்­தில் இருப்­ப­தாக செய்­தி­கள் வரு­கின்­றன.

THANKS FOR 

http://business.dinamalar.com/news_details.asp?News_id=42757

No comments:

Post a Comment