Saturday, June 30, 2018

ஆடிட்டர்கள் திடீரென விலக என்ன காரணம்? : நிறுவனங்களிடம் விளக்கம் கோருகிறது மத்திய அரசு

புதுடில்லி: கணக்கு தணிக்கை செய்­யும் ஆடிட்­டர்­க­ளின் வில­க­லுக்­கான கார­ணங்­களை தெரி­விக்­கு­மாறு, சம்­பந்­தப்­பட்ட கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்­யும் பணி­யில் இருந்து ஆடிட்­டர்­கள் வில­கு­வது, சமீப கால­மாக அதி­க­ரித்­துள்­ளது.புதிய கம்­பெ­னி­கள் சட்­டம், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னத்­தின் நிதி முறை­கே­டு­க­ளுக்கு, ஆடிட்­ட­ரை­யும் பொறுப்­பாக்கி, அப­ரா­த­மு­டன், 10 ஆண்­டு­கள் சிறை தண்­டனை அளிக்க வகை செய்­கிறது.இதன் கார­ண­மாக, வர்த்­த­கம் மற்­றும் நிதி விப­ரங்­களை சரி­வர அளிக்­காத நிறு­வ­னங்­களை விட்டு, ஆடிட்­டர்­கள் வெளி­யே­று­கின்­ற­னர்.கடந்த மே மாதம், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட, 42 நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் திடீ­ரென வில­கி­னர். இதை­ய­டுத்து, அந்த நிறு­வ­னங்­களில், நிதி முறை­கே­டு­கள் நடை­பெற்­றுள்­ளதா... ஆடிட்­டர்­கள் வில­க­லுக்கு உண்­மை­யான கார­ணம் என்ன என்­பதை விசா­ரிக்­கு­மாறு, மேற்கு மண்­டல நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் இயக்­கு­னர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களில் இருந்து, திடீ­ரென அதிக அள­வில் ஆடிட்­டர்­கள் வெளி­யேறி வரு­கின்­ற­னர். அதற்­கான கார­ணத்தை தெரி­விக்­கு­மாறு, அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு அமைச்­ச­கம் கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.அதில், வில­க­லுக்­கான அடிப்­படை கார­ணங்­களை அறிந்து கொள்­ளும் வகை­யில், 45 கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் பதிலை பொறுத்து, அடுத்த கட்ட நட­வ­டிக்கை துவங்­கும். ஒரு நிறு­வ­னத்­தின் அன்­றாட நிதிப் பரி­வர்த்­த­னை­களை அறிந்­தி­ருக்­கும் ஆடிட்­ட­ருக்கு, அந்­நி­று­வ­னத்­தின் நிதி தவ­றாக கையா­ளப்­ப­டு­வது குறித்து எது­வுமே தெரி­யாது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அப்­படி இருக்­கும்­போது, உட­ன­டி­யாக அது குறித்து நிறு­வ­னங்­க­ளி­டம் விளக்­கம் கேட்க வேண்­டி­யது, ஆடிட்­ட­ரின் கடமை. அவ்­வாறு இருக்­கும்­பட்­சத்­தில், ஆடிட்­டர் ஏன் தலை­யி­ட­வில்லை என்ற கேள்வி எழு­கிறது.அத­னால், ஆடிட் நிறு­வ­னங்­கள், ஆடிட் குழு தலை­வர்­கள், தனி ஆடிட்­டர்­கள் ஆகி­யோ­ரை­யும் அழைத்து, வில­க­லுக்­கான கார­ணம் குறித்து விசா­ரிக்க, அமைச்­ச­கம் முடிவு செய்­துள்­ளது. நிறு­வ­னங்­கள் சட்­டத்­தின்­படி, ஒரு நிறு­வ­னத்­தின் ஆண்டு கணக்­கு­கள் மற்­றும் நிதி நில­வ­ரம் குறித்த வெளிப்­ப­டை­யான தக­வல்­களை அளிக்க வேண்­டிய முக்­கிய பொறுப்பு, ஆடிட்­ட­ருக்கு உள்­ளது. அந்த தக­வல்­கள், உரிய கணக்­கீட்டு நடை­மு­றைப்­படி அளிக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை ஆய்வு செய்­யும் உரி­மை­யை­யும், சட்­டம் வழங்­கு­கிறது. அத­னால், ஒரு நிறு­வ­னத்­தில் இருந்து ஆடிட்­டர் விலகி, புதிய ஆடிட்­டர் இணை­யும்­போது, அதற்­கான உண்­மை­யான கார­ணத்தை, இரு தரப்­பி­ன­ரி­டம் அறிந்து கொள்ள, அமைச்­ச­கம் விரும்­பு­கிறது. தற்­போது, அதற்­கான நட­வ­டிக்கை துவங்­கி­யுள்­ளது.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.
சமீ­பத்­தில், மன்­ப­சந்த் பிவ­ரே­ஜஸ், வக்­ரங்கி, ஜெட் ஏர்­வேஸ், எல் அண்டு டி கப்­பல் பிரிவு, அட்­லாண்டா, ஐநாக்ஸ் விண்டு உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் வெளி­யே­றி­னர்.இதற்கு, நிறு­வ­னங்­கள் வெளிப்­ப­டை­யாக விப­ரங்­களை தெரி­விக்­கா­ததே கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது


THNAKS FOR THE 
http://business.dinamalar.com/news_details.asp?News_id=42781&cat=1

No comments:

Post a Comment