Thursday, June 28, 2018

மூன்றாம் தரப்பு தணிக்கை தயாராகும் ஜி.எஸ்.டி.என்., நிறுவனம்

சரக்கு மற்­றும் சேவை வரியை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­ன­மான, ஜி.எஸ்.டி.என்., அதன் மென்­பொ­ருளை, மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த இருப்­ப­தாக, அதன் தலைமை செயல் அதி­காரி, பிர­காஷ் குமார் தெரி­வித்­துள்­ளார்.

ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம், சரக்கு மற்­றும் சேவை வரியை வசூ­லிக்க தேவை­யான தக­வல் தொழில்­நுட்­பத்தை வழங்கி வரு­கிறது. இதற்கு தேவைப்­படும் மென்­பொ­ருளை, இன்­போ­சிஸ் நிறு­வ­னம் உரு­வாக்கி கொடுத்­துள்­ளது. இதில், 1.11 கோடி வணி­கங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னத்­தின் மென்­பொ­ருள் பாது­காப்பு உள்­ளிட்­ட­வற்றை, மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த இருப்­ப­தாக, பிர­காஷ் குமார் தெரி­வித்­துள்­ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­கள், மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு தங்­களை உட்­ப­டுத்­திக்­கொள்­வது வழக்­க­மான நடை­மு­றை­யாக உள்­ளது. அதே போன்ற நடை­மு­றையை, ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னத்­தி­லும் கொண்டு வர இருக்­கி­றோம். எப்­போ­தெல்­லாம், ஜி.எஸ்.டி., குறித்த சட்­டங்­கள் மாற்­றத்­துக்கு உள்­ளா­கி­றதோ அல்­லது எப்­போ­தெல்­லாம் சுற்­ற­றிக்கை வரு­கி­றதோ அப்­போ­தெல்­லாம், இன்­போ­சிஸ் மூலம் நாங்­கள் மென்­பொ­ரு­ளில் மாற்­றம் செய்­கி­றோம்.

இந்த மாற்­றங்­களை மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த விரும்­பு­கி­றோம். கடந்த, 2017 ஜூலை, 1ம் தேதி முதல், ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம், 11.5 கோடி வரி தாக்­கல்­க­ளை­யும், 376 கோடி விலை பட்­டி­யல்­க­ளை­யும் கையாண்­டு உள்ளது. தற்­போது, 1.11 கோடி வணி­கங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இதில், 63.76 லட்­சம் வணி­கங்­கள், சேவை வரி மற்­றும் வாட் வரி­யி­லி­ருந்து மாறி வந்­துள்­ளன. மேலும், 47.72 லட்­சம் வணி­கங்­கள், புதி­தாக பதிவு பெற்­றுள்­ளன. 17.61 லட்­சம் வணி­கங்­கள், கலவை வரி திட்­டத்தை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் ஏற்­றுள்­ளன. இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.


THANKS

http://business.dinamalar.com/news_details.asp?News_id=42755

No comments:

Post a Comment